தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினம் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில்... அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைத்து ஆபத்து காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் ஏர் டாக்ஸியை உருவாக்கி வெற்றிகரமாக அதன் சோதனையை நிறைவு செய்தார் அஜித்.  

படப்பிடிப்பு பணிகள் மற்றும் தக்சா பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க கோவா சென்றுள்ளார். 
விசுவாசம் பட வேலைகள் முடிந்தாலும், திரைப்படம் ரிலீஸ் சம்மந்தமான பேச்சுகள் சூடி பிடித்து வரும் நிலையில் இந்த தலைவலியே வேண்டாம் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் அஜித் தன்னுடைய குடும்பத்தோடு கோவாவிற்கு சென்றுவிட்டார்.

ஓய்வுக்கு பின் அவர் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிக்கும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…