தல அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை' என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி, அஜித்தை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தற்போது 'நேர்கொண்ட பார்வை' பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் இரண்டாவதாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வலிமை'.

இந்த படத்திற்காக செம யங் லுக்கிற்கு மாறியுள்ளார் அஜித். விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு படத்திலும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்த அஜித், வலிமை படத்திற்காக யங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அவர் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் கிளீன் ஷேவ்,  கருகரு முடி என க்யூட்டாக உள்ளார் தல.

மேலும் இப்படித்தான் வலிமை படத்திலும் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.