பொங்கல் ஸ்பெஷல்லாக  தல அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற குடும்ப படம் என்று பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக,  பாலிவுட் திரையுலகில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தை 'சதுரங்கவேட்டை' படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

ஏற்கனவே நான்கு நாட்கள் மட்டுமே இதுவரை படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்தப் படத்தை அடுத்து போனிகபூர் தயாரிப்பில் இன்னொரு படத்திலும் அஜித் நடிக்கிறார். என்ற தகவலை அஜித் தரப்பு தற்போது உறுதிசெய்துள்ளது.

மேலும் இந்த இரண்டாவது படத்தின் படபிடிப்பு 2020 வரை நடைபெறுகிறது. அதன் பிறகு நடிக்க அஜித் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதனால் இதுவரை இன்னொரு தயாரிப்பாளர் படத்தில் அஜித் ஒப்பந்தமாகி இருப்பதாக யாரும் தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அஜித் தரப்பில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 'விஸ்வாசம்' படத்தை தொடந்து அஜித், மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, தன்னுடைய மேனேஜர் மூலம் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.