ajith give the different punishment for worker
தல அஜித் ஒரு போதும் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் நபர்களை பிரித்து பார்த்தது இல்லை. தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக தான் மதிப்பர். கடந்த சில வருடங்களுக்கு முன் கூட தன்னிடம் வேலை செய்யும் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். அதே போல அவர்கள் வந்து செல்ல தனியாக கார் வசதியும் செய்துக்கொடுத்துள்ளார்.
மேலும் வேலை செய்பவர்கள் வீட்டில் எதாவது விசேஷம் என்றால், இவர் செல்ல விட்டாலும் அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டு கேட்டு செய்வார்.

இந்நிலையில் இவரிடம் மேக் அப் மேனாக வேலை பார்த்தவர், தயாரிப்பாளர்களிடம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக கேட்டு வசூலித்தாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஒரு நாள் அஜித்துக்கு தெரிந்ததும் அவர் மேக் அப் மேனை நேரில் அழைத்து விசாரித்துள்ளார்.

அது உண்மை என தெரிந்தும், தொடர்ந்து அந்த மேக் அப் மேன் மறுத்துள்ளார். உண்மையை ஒப்புக்கொள்ளாமல்... மீண்டும் மீண்டும் அவர் உண்மையை மறைக்க பொய் பேசிக்கொண்டே இருந்ததால் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டு அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அவருடைய மனைவிக்கு, தல வீட்டிலேயே ஒரு வேலை போட்டு கொடுத்தாராம்.
தற்போது இந்த தகவல் வெளியே வர அஜித் ரசிகர்கள் பலர் இந்த தகவலை ஷேர் செய்து வருகின்றனர்.
