ajith gifted watch for vivek

அஜித்துடன், 'காதல் மன்னன்', 'வாலி', 'என்னை அறிந்தால்' என பல படங்களில் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் விவேக். 

இவர் சமீபத்தில் அஜித் தனக்கு கொடுத்த ஒரு பரிசு குறித்து சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, தற்போது இணையத்தளத்தில் கதை ஒன்றும் பரவி வருகிறது, அது என்னவென்றால் அஜித்தும் விவேக்கும் ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை மிகவும் கவர்ந்ததாகவும்.

அந்த வாட்சின் அழகை பார்த்து பிரமித்த விவேக், என்றாவது ஒருநாள் தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்கிவிடுவேன் என்றும் கூறினாராம். 

உடனே சற்றும் யோசிக்காமல், அஜித் தனது கையில் இருந்த வாட்சை கழட்டி விவேக்கில் கையில் அணிவித்ததாகவும், இதை பார்த்து விவேக் மெய்மறந்து போனதாகவும் ஒரு செய்தி பரவியது. 

இந்த செய்தி குறித்து ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், 'இந்த செய்தியில் கூறியபடி அப்படியே நடக்கவில்லை. 

ஆனால் இப்போது அது பெரிய விஷயமில்லை. இந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழையும் உள்ளது. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, சீக்கோ வாட்ச். என்றும், அஜித்தின் சிறந்த குணத்திற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சிறந்த உதாரணம் என்றும் விவேக் கூறியுள்ளார்.