அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷான் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை, மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இதற்காக பிரமாண்டமான கோர்ட்டு செட் போடப்பட்டு அஜித் வழக்கறிஞ்ராக விவாதம் செய்யும் காட்சி எடுக்கப்பட்டது. 

மேலும் கைத்தக்கட்டி ஆரவாரம் செய்ததோடு, அஜித்துடன் கைகுலுக்கு தங்களுடைய பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்துள்ளனர். அனைவருடைய பாராட்டு மழையில் நனைந்த அஜித், நெகிழ்ச்சியோடு படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த பாராட்டுக்கள் இயக்குனர் வினோத்துக்கு தான் போய் சேர வேண்டும் என்றும், அவருடைய இயக்கத்தில் நடித்ததை மிகவும் சவுகரியமாக உணர்ந்ததாக அஜித் இந்த படத்தின் அனுபவம் குறித்து படக்குழுவிடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.