ajith fight in visuvaasan set
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் திரைப்படம் 'விசுவாசம்'. இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் பிரமாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தான் இந்த படத்தின் சண்டை காட்சிகளும் படமாக்கப்படுகிறது.
விசுவாசம் படத்தின் சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அஜித் கடைசியாக நடித்த பெரும்பாலான படங்களில் சண்டை பயிற்சியாளர் சில்வா தான் பணியாற்றினார். ஆனால் 'விவேகம்' படத்தின் போது சில்வா மீது அஜீத்துக்கு ஆதிருப்தி, ஏற்பட்டதால் விசுவாசம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் திலீப் சுப்பராயனை கமிட் செய்துள்ளார்.

'மங்காத்தா' படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைப்பது இந்த படத்திற்குத்தான். இதனால் இதில் டூப் இல்லாமல் பெரும்பாலும் அஜித்தை ரியலாகவே நடிக்க வைத்து சண்டை போட வைத்துள்ளாராம் திலீப் சுப்பராயன்.
