ajith felt also in meeter intrest

 இணை தயாரிப்பாளராக இருந்த அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டது பற்றியது தான்.

திரையுலகைப் பொறுத்தவரை இந்தக் கந்து வட்டி பிரச்சினை பலரையும் ஆட்டி வைத்து வருகிறது. இந்தப் பிரச்னையில் சிக்கி வெளியே வந்தவர்கள் சிலரே என்றாலும், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வட்டியாய்க் கொடுத்து விட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்கள் பலர். ஒரு சிலர் மன வேதனை தாங்க முடியாமல் மரணம் அடைந்துள்ளனர்.

சசிகுமாரின் மைத்துனர் ஆன இணை தயாரிப்பாளர் அசோக் குமார், அன்புச்செழியன் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் பெற்று, அதனை திருப்பி அடைக்க முடியாமல்... மன உளைச்சலுக்கு ஆளாகி மரணம் அடைந்தது குறித்து திரையுலகைச் சேர்ந்த பலர் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் சென்னையில் உள்ள அசோக் குமார் வீட்டிற்குச் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்து வட்டி பிரச்சனையில் அதிகமாக சிக்கி உள்ளவர்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், டெக்னிசியன் உள்பட பல இதில் சிக்கித் தவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரு முறை அஜித் கூட கந்துவட்டி பிரச்னையில் சிக்கி இருந்தார் என்றும் தெரிவித்தார். அதே போல் தற்போது லிங்கு சாமி, பிரபு சாலமன் போன்ற பலர் கந்து வட்டி பிரச்சனை காரணமாக தவித்து வருகின்றனர். கூடிய விரைவில் இந்தப் பிரச்சனை தீர வேண்டும் என தான் நினைப்பதாகத் தெரிவித்தார்.

அவர் சொன்னதை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.