அஜீத் ரசிகர்களுக்கு இப்போது தல போகிற விஷயம் ‘விஸ்வாஸம்’ படம் பொங்கலுக்கு வருகிறதா, முந்துகிறதா அல்லது பொங்கலுக்குப் பிந்துகிறதா என்பதுதான். அவர்களது இந்த சந்தேகத்தை இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ உட்பட யாரும் தீர்த்துவைக்காததால் தலயே வெடித்துவிடும் அளவுக்கு அலைகிறார்களாம்.

இதன் விளைவுதான் அவர்களைப் பற்றி தயாரிப்பாளர் மற்றும் அஜீத் தரப்பு கோபம் கொள்ளவைத்து தப்புத்தப்பாகவும் பேசவைத்திருக்கிறது. கடந்த இருவாரங்களாகவே ஒரு மீடியா விடாமல் ‘விஸ்வாஸம்’ பட ரிலீஸ் குழப்பம் குறித்து செய்தி வெளியிட்டுவருகிறார்கள்.  இதில் எந்தச் செய்தியை நம்புவது. தல படம் உண்மையிலேயே எந்தத் தேதியில்தான் வருகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் அலுவலகத்துக்கும் அஜீத்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா என்பவருக்கும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் போன்கால்கள் வந்துகொண்டே இருந்தனவாம்.

‘நூறு கோடிக்கும் மேல செலவழிச்சி படம் எடுக்குற எங்களுக்குத் தெரியாதா படத்தை எப்ப ரிலீஸ் பண்ணனும்னு? என்று கோபத்துடன் போனை மேற்படி இருவருமே ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு புது நம்பர்களில் நடமாடுகிறார்களாம். ‘என்னங்க போன் நம்பரை மாத்திட்டீங்க’ என்று கேட்பவர்களுக்கு தயாரிப்பாளரும் அஜீத் மேனேஜரும் தரும் பதில், ‘சில மன வளர்ச்சி இல்லாத மெண்டலுங்க தொடர்ந்து ரிலீஸ் தேதி கேட்டு நச்சரிக்கிறானுங்க’ என்பதுதான்.