சினிமா சங்கங்கள் அத்தனையும் ஒரேயடியாக சண்டைக்கு நின்று சட்டையை கிழிக்க வந்தாலும், நான் கிழிச்சதுதான் முதல்ல என்று மூக்கை விடைத்துக் கொண்டு நிற்பவர் ப்ளூசட்டை மாறன்

முக்கால்வாசி சினிமா தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் பெரும் தலைவலியாக இருப்பது ப்ளூசட்டையை போட்டுக்க்கொண்டு தமிழ் டாக்கீஸ் என்கிற பெயரில்  பெயரில் யு ட்யூபில் உலாவரும் சினிமா விமர்சகர் இந்த ப்ளூசட்டை மாறன்தான்.

எல்லா படங்களையும் இழுத்துப்போட்டு சரமாரியாக வெளுக்கும் இவரது விமர்சனத்தை மில்லியன் கணக்கில் ரசிக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இந்த நிலையில் அவரே ஒரு படத்தை இயக்கினால் எப்படியிருக்கும்? சினிமா உலகினரின் கழுகுக் கண்கள் ‘ரிலீசாகட்டும். வைத்துக் கொள்கிறோம் கச்சேரியை...’என வரையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அவர்தான் படுஸ்மார்ட் ஆச்சே? தன் படத்திற்கு ‘ஆன்ட்டி இண்டியன்’என்ற தலைப்பு வைத்திருக்கிறார். படம் தியேட்டருக்கு வந்தால் போதும். ஓட வைக்கிற வித்தையை பி.ஜே.பி பார்த்துக்கும் என்ற நம்பிக்கையோ என்னவோ ?