Asianet News TamilAsianet News Tamil

பீஸ்ட் படத்தை வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்...அட விடுங்கப்பா? இதுக்கு மேல முடியல..நொந்து போன விஜய் ரசிகர்கள்!

Beast: பீஸ்ட் திரைப்படம், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

Ajith fans troll on beast movie video goes viral
Author
Chennai, First Published Apr 13, 2022, 5:33 PM IST

பீஸ்ட் திரைப்படம், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

பீஸ்ட் வெற்றியா? தோல்வியா?

இந்த படம் அஜித்தின் வலிமை மற்றும்  நாளை ரிலீசாக உள்ள யாஷின் கேஜிஎஃப் 2 படத்தை விட அதிக வரவேற்பு  கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Ajith fans troll on beast movie video goes viral

சன் பிக்சர் தயாரிப்பில், ரூ 190 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே  பட்ஜெட் தொகையான பெற்று தந்தது. மேலும், கூடுதலாக  57 கோடிகளை லாபமாக பெற்று விட்டது.

ரசிகர்களின் கொண்டாட்ட படம் பீஸ்ட்:

Ajith fans troll on beast movie video goes viral

ரசிகர்களின் எதிர்பார்த்தது போலவே, படத்தின் டிக்கெட் விற்பனையும் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன.  அதன்படி, பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

கலவையான விமர்சனங்கள்:

Ajith fans troll on beast movie video goes viral

ஆனால், அதேசமயம் பீஸ்ட் திரைப்படம் பல மோசமான விமர்சனங்களையும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம். விஜய் ரசிகர்களிடம் இருந்தே இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
சில விமர்சகர்கள் பீஸ்ட் படத்திற்கு 3, 2.5 என்ற அளவிலேயே ரேட்டிங் கொடுத்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதில், மீம்கள் போட்டு சிலர் பீஸ்ட் படத்தை கலாய்த்து வருகின்றனர். 

அஜித்தின் ரசிகர்களின் குசும்புத்தனம்:

Ajith fans troll on beast movie video goes viral

இந்நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படம் Disaster என பல பதிவுகளை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளனர்.  அத்துடன், விஜயை கலாய்க்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நொந்து போன விஜய் ரசிகர்கள், பீஸ்ட் படத்திற்கு ஆதரவான கமெண்ட்கள், ரசிகர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க....Suriya 41: சூர்யா 41 படப்பிடிப்பிற்கு பிறகு...வீடு இல்லாத ஏழைகளுக்கு சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்...

Follow Us:
Download App:
  • android
  • ios