சமீபத்தில் வெளியான அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர், இதற்கு முன் வெளியாகி சாதனை படைத்த 'கபாலி' மற்றும் 'தெறி 'ஆகிய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள அஜித் ரசிகர்கள் இந்த டீசரை திரையரங்கில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு, பிரபல திரையரகத்தை அணுகியுள்ளனர். 

அவர்களுடைய ஆசைக்கு மதிப்பளிக்கும் விதமாக அந்த திரையரங்க உரிமையாளர் இணையத்தளத்தில் வெளியானதும் திரையரங்கில் திரையிட சம்மதித்து, சிறப்பு டீசர் காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.

அஜித்தை டீசரில் பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் கத்தி, ஆரவாரம் செய்ததோடு, எல்லை மீறிய சந்தோஷத்தில் திரையில் பால் ஊற்றி பாலாபிஷேகமே செய்து விட்டனர். 

இதனால் திரையரங்க உரிமையாளருக்கு தற்போது 2 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். மேலும் இந்த புகைப்படத்தை திரையரங்க உரிமையாளர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கிரையிங் ஸ்மைலி போட்டு ஷேர் செய்துள்ளார்.