கமல்ஹாசனை தவிர தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் அத்தனை பேரும் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தர்பாரில் ரஜினி, நேர்கொண்ட பார்வையில் அஜித், அட்லீ இயக்கத்தில் விஜய், சிந்துபாத் உள்ளிட்ட சில படங்களில் விஜய்சேதுபதி, அசுரனின் தனுஷ், ரிலீஸுக்கு தயாராகிவிட்ட சிவகார்த்தியின் ‘மிஸ்டர் லோக்கல்’ என்று ஆளாளுக்கு என்கேஜ்டாக இருக்கின்றனர். மேற்சொன்ன எல்லா படங்களிலும் அந்தந்த மாஸ் ஹீரோக்கள் செம்ம கெத்தான வேடங்களில் இருக்கிறார்கள். ஆனால் அஜித் மட்டும் ‘நேர்கொண்ட பார்வை’யில் அப்படியில்லை என்று இண்டஸ்ட்ரியில் ஒரு தகவல். அமிதாப்பச்சனின் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் அஜித் வரும் போர்ஷன் மிக மிக குறைவுதானாம்.

விஸ்வாசம் எனும் மரண மாஸ் ஹிட்டை கொடுத்து முடித்திருக்கும் அஜித்திடம் அவரது ரசிகர்கள் அடுத்தும் ஒரு டாப்பு டக்கர் மாஸ் படத்தைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடக்கும் யதார்த்தமோ அவர்களை அப்செட்டாக்கி உள்ளது. இது போதாதென்று விஜய் ரசிகர்கள் வேறு இவர்களை வம்புக்கு இழுக்கின்றனர். கடந்த சில நாட்களாக அஜித்தை சமூக வலைதளங்களில் வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அதில் ”அஜித் ரசிக குஞ்சுகளே ‘நேர்கொண்ட பார்வை’யில் உங்க தல ஒண்ணும் ஹீரோ இல்ல. கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல்தான் பண்ணியிருக்கார். அந்தாளு பத்து வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஒரு ஹிட் கொடுப்பார். விஸ்வாசம் பட ஹிட்டுக்கு பிறகு எப்படியும் இனி 2030லதான் அவர்கிட்ட அடுத்த ஹிட்டை எதிர்பார்க்க முடியும். இந்த லட்சணத்துல இந்தப் படத்துல கெஸ்ட் ரோல்தானாம். அவரு ஹீரோவா நடிச்சாலே படம் ஹிட்டாகுறது கஷ்டம்தான், இதுல கெஸ்ட் ரோல். அதுலேயும் படத்தோட ஸ்டில்ஸை பார்த்தால் ரொம்ப கிழட்டுத்தனமா இருக்குதேய்யா!” என்று கன்னாபின்னாவென கலாய்த்திருக்கிறார்கள். தாறுமாறான பதிலடிக்கு காத்திருக்கும் தல ரசிகர்கள், கூடிய விரைவில் தெறிக்க விடுவார்கள் என்று தெரிகிறது.