தல அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் 'வீரம்' 'வேதாளம்' படத்தை தொடர்ந்து இன்னும் பெயரிட படாத 'AK 57' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது என அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வேதாளம் படம் 2015 ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியானது என்றும் . அதன் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 'AK57' படத்தின் முதல் பார்வை, டீஸர் போன்றவை இது வரை வெளிவரவில்லை.
தீபாவளிக்கு எதாவது அறிவிப்பு வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால் கடைசியில் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் வெளிவராது என்று தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இன்று' தல தல தான்' என்று ரசிகர் மன்ற குழு இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில் வேதாளம் படத்திற்கு பிறகு எங்களை வெகு மாதங்களாக காத்திருக்க வைக்கிறீர்கள். ரசிகர்கள் அனைவரும் 2017ம் ஆண்டு வருட பிறப்பில் தல படத்தின் முதல் பார்வையோடு கொண்டாட விரும்புகிறோம், ஆகையால் தயவு செய்து எங்களின் கோரிக்கையை ஏற்று 'AK 57' முதல் பார்வையை அல்லது படத்தின் தலைப்பையாவது வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளனர் .
தற்போது அஜித் ரசிகர்கள் இயக்குனர் சிவாவிற்கு வைத்த இந்த கோரிக்கை நிறைவேற்ற படுமா.... பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
