’சின்னப்பயபுள்ள  சிம்புவே அறிக்கை மேல அறிக்கை விட்டு தெறிக்க விடுறாப்ல. இன்னொரு பக்கம் விளம்பரமே தேவைப்படாத சூப்பர் ஸ்டார் படத்துக்கே ஃபர்ஸ்ட் லுக், செக்ண்ட் லுக்குன்னு இதுவரை ஏழெட்டு லுக்கு வெளியிட்டுட்டாங்க. ஆனா நீங்க மட்டும் எந்த அப்டேட்டும் குடுக்காம சிவ சிவான்னு இருந்தா எப்பூடி?’ என்று அஜீத் ரசிகர்கள் ‘விஸ்வாஸம்’ பட இயக்குநர் சிவாவை சீண்டத் துவங்கியிருக்கிறார்கள்.

ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கே 800க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் போடுவார்கள் என்னும் நிலையில், அதே பொங்கலுக்கு களம் இறங்குவதாகச் சொல்லப்படும் அஜீத்தின் ‘விஸ்வாஸம்’ படத்துக்கு தியேட்டர்கள் எங்கே இருக்கிறது. அப்படம் இரண்டு வாரங்கள் தள்ளி குடியரசு தினத்துக்கு வந்தால்தான் ‘சர்கார்’க்கு கிடைத்த அதே 800 தியேட்டர்கள் கிடைக்கும் என்ற முனுமுனுப்பு விநியோகஸ்தர்கள் வட்டாரத்திலும் கிளம்ப ஆரம்பித்திருக்கும் நிலையில், பட ஹீரோ அஜீத், தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி ஃபிலிம்ஸ், மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் பலத்த மவுனம் சாதித்து வருகிறார்கள்.

இந்த மவுனம் இன்னும் ஓரிரு நாட்களுக்கு நீடித்தால் ‘விஸ்வாஸம்’ பொங்கலுக்கு வராது என்பது உறுதியாகிவிடக்கூடும் என்ற நிலையில் வலைதளங்களில் பட இயக்குநர் சிவாவை நோக்கி கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.  ஆஃப்டர் ஆல் சிம்புகிட்ட இருக்க ‘வீரம்’ ‘விவேகம்’ கூட உங்க கிட்ட இல்ல. அட்லீஸ்ட் தல மேல உள்ள ’விஸ்வாஸம்’ உணமைன்னா படம் பொங்கலுக்கு வருதா இல்லைன்னு அப்டேட் குடுங்க சிவா’ என்று அவர் பட டைட்டில்களை வைத்தே கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் தல ரசிகர்கள்.