பொதுவாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளிடம் தல - தளபதி ஆகிய இருவரின் யாரை பிடிக்கும் என கேட்டால், சற்று மழுப்பி இருவரையும் பிடிக்கும் என கூறுவது வழக்கம். அதிலும் அவர்களுடன் இணைந்து நடிக்க விருப்பம் உண்டா என கேட்டால், தற்போது கமிட் ஆகி நடித்து வரும் அனைத்து படங்களில் இருந்து விலகி உடனடியாக தல - தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஓடி விடுவேன் என கூறுவார்கள்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா ஆனந்திடம், ஆர்.ஜே.பாலாஜி உங்களுக்கு தலயை - பிடிக்குமா அல்லது தளபதியை பிடிக்குமா என கேள்வி எழுப்ப, அதற்கு அவர் தலயை பிடிக்கும் என பதில் அளித்தார். அதே போல் தளபதியையும் விட்டு கொடுக்காமல் பேசினார்.

ப்ரியா ஆனந்த் பேசிய வீடியோவை தல ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நடிகை ப்ரியாமணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

இந்த வீடியோ பிரியாமணியின் கண்ணில் பட, அது நான் இல்லை என அவர் பதில் கொடுத்தார். இதை தொடர்ந்து நடிகை பிரியாமணி அந்த வீடியோவில் பேசியது நான் தான் என ஒப்புக்கொண்டார். பின் இந்த வீடியோவை பதிவு செய்த ரசிகர் பிரியா ஆனந்த் என பெயர் போடுவதற்கு பதிலாக ப்ரியாமணி என போட்டுவிட்டதாக தெரிவித்தார். இந்த ரசிகரை தொடர்ந்து தல ரசிகர்கள் பலர் பிரியா ஆனந்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.