சிறுத்தை சிவாவோடு தல அஜித்குமார் ஒரு மாமாங்கமாக தொடர்ந்து நான்கு படங்கள் பணிபுரிந்த கதையும், அதில் மூன்றாவது படமான விவேகம் செம்ம அவுட்டாகியதும், தல ரசிகர்கள் தாறுமாறாக டென்ஷனான கூத்தையும், நாலாவது படமான ‘விஸ்வாசம்’ அறிவிக்கப்பட்டதும் ‘இந்தப் படத்தை ஹிட் பண்ணலேன்னா உன்னை அவுட் பண்ணிடுவோம்’ என்று அவர்கள் மிரட்டல் விடுத்த கொடுமையையும் கோலிவுட் என்ன டோலிவுட், மல்லூட் என பாலிவுட் வரை அறிந்து வைத்த விஷயங்கள். 

இந்நிலையில் ‘இதுதான் அஜித்தோட என்னோட கடைசி படம். நான் ஒரு ஹிட் டைரக்டர்னு நிரூபிச்சுட்டு போறேண்டா’ என்று சபதம் போட்ட சிவா, விஸ்வாசத்தை தாறுமாறான ஹிட்டாக்கிவிட்டு அஜித்தை விட்டு அக்கட நகர்ந்தார். 

இந்நிலையில் விஸ்வாசம் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கையிலேயே இயக்குநர் விநோத் இயக்கத்தில், ‘பிங்க்’ இந்திப்பட ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கமிட்டான அஜித், ஷூட்டிங் முடித்துவிட்டு இதோ டப்பிங்கில் பிஸியாக இருக்கிறார். 

இந்நிலையில் என்னமோ தெரியலை, ஏனோ புரியலை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மேல் தல ரசிகர்களுக்கு பெரிய ஈடுபாடில்லை என்று ஒரு தகவல். இதன் ஒரிஜினல் வெர்ஷனனான ‘பிங்க்’ படத்தில் மிக வயதானவரான அமிதாப் நடித்திருப்பார். அதனால் இதில் அஜித்தின் ஆக்‌ஷன், காதல் காம்போ இருக்காது என்று நினைக்கிறார்களாம். மேலும், இயக்குநர் விநோத்துக்கும் அஜித்துக்கும் வேவ் லென்த் சூட் ஆகவில்லை! என்றும் ஒரு தகவல். 

இந்நிலையில் இந்த படம் முடிந்ததும், தயாரிப்பாளர் போனி கபூரின் அக்ரீமெண்டின் படி தொடர்ந்து விநோத் உடனே அஜித் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகாத நிலையில் தல ரசிகர்கள் கடுப்பாகி  கிடக்கிறார்கள். எனவே சோஷியல் மீடியா வழியாக சிறுத்தை சிவாவுக்கு அழைப்பு வைக்க துவங்கிவிட்டனர். ‘சிவாண்ணே நாங்க உங்கள திட்டுனதையெல்லாம் மறந்துடுங்க. விஸ்வாசம் ரேஞ்சுக்கு தல-க்கு ஒரு பக்கா மரணமாஸ் ஹிட் ஒன்றை மறுபடியும் கொடுங்கண்ணே. நாங்க உங்கள திட்டுனதும் தல மேல இருக்குற அன்பாலதான், இப்ப மறுபடியும் உங்களை அழைக்கிறதும் அவர் மேலே இருக்கிற அன்பாலதான். நேர்கொண்ட பார்வைக்கு அடுத்து உங்க படத்துல தல கமிட் ஆகணும்.’ என்று வெறித்தனமாக வெத்தல பாக்கு வெச்சு அழைக்கிறார்களாம். 

தன் ரசிகர்கள் தனக்காக எந்தளவுக்கும் எகிறியும் அடிக்கிறார்கள், இறங்கியும்  உருள்கிறார்களே என்பதை கண்டு அஜித் நெகிழ்ந்து  நிற்க, நடிகர் சூர்யாவோ கதறிக்கிடக்கிறார்.

இதில் சூர்யா எங்கிருந்து வந்தார்? என்கிறீர்களா...அதாவது தொடர் ஃபிளாப்புகளால் நொந்திருக்கும் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தான் நடித்து முடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்க்கிறார். 

தொடர்ந்து ஹிட் கொடுத்தால்தான் தன் மார்க்கெட்டை நிலை நிறுத்த முடியும் எனும் வெறியிலிருக்கும் அவர், ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பணியாற்ற சில வருடங்களுக்கு முன் ஒரு அக்ரீமெண்ட் போட்டிருந்தார். இப்போது அதை முடித்து தரும்படி சிவாவை ஞானவேல் நெருக்கியிருக்கிறார். சிவாவும் ஒ.கே. சொல்லிவிட்டார். 

விஸ்வாசம் போல் தனக்கு ஒரு மெகா ஹிட்டை சிவா  தருவார்! என சூர்யா நம்பிக் கிடந்த நிலையில், இப்படி அஜித்தின் ரசிகர்கள் உள்ளே புகுந்து சிவாவின் மனதை கலைப்பதை சூர்யா எதிர்பார்க்கவுமில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. 

ஆனால் தல ரசிகர்களை வெளிப்படையாக எச்சரிக்கவோ, விமர்சிக்கவோ தைரியமில்லாமல் பாவம் தன் வட்டாரத்தில் நொந்து பேசுகிறாராம். தலதான் கெத்துன்னா அவரது ரசிகர்களும் மாஸ் தானா!