அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் சரியாக மதியம் 1.30 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் விஸ்வாசம் படம் குறித்த மீம்ஸ்களும், டீசரில் இடம்பெற்றிருந்த வசனங்கள், புகைப்படங்கள் என அனைத்தும் வைரலாகி வருகிறது. ட்ரெய்லர் வெளியான 4 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்ஸ், 8 நிமிடத்தில் 2 லட்சம்  லைக்ஸ், 12 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ் , 25 நிமிடத்தில் 2 மில்லியன் வியூஸ் என யூடியூப்பை அஜித் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

டிரெய்லர் தற்போதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ட்ரெய்லர் வெளியானது முதலே  தொடர்ந்து ட்விட்டர் ட்ரென்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்திலேயே உள்ளது.

விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியீட்டை காண  சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி தியேட்டரில்  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் வளாகம் முழுவதுமாக குவிந்ததால், தியேட்டருக்குள் ட்ரெய்லரை போடாமல், திறந்த வெளியில் LED  திரை வைத்து சுற்றிலும் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு டிரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.

அதேபோல, நெல்லையில் உள்ள ராம் சினிமாஸில் ஆயிரக்கனக்கான ரசிகர்கள் திரண்டு ட்ரெய்லர் வெளியீட்டை கொண்டாடினர். அந்த கொண்டாட்டத்தில் நடிகர் ரோபோ சங்கர் கலந்துகொண்டார். அவர் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து விஸ்வாசம் ட்ரெய்லரை பார்த்து புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்திற்கு டிரெய்லரை, பட வெளியீட்டைப்போல ஆயிரக்கணக்கில் திரண்டு கொண்டாடியதும், திறந்தவெளியில் ஒளிபரப்பியது இதுவே முதல்முறை என சொல்லலாம்.