போன வருட தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளம் படம் ரிலீஸ் ஆகி தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

அதே போல் இந்த வருடம் தற்போது அஜித் நடித்து வரும் 57வது படத்தின் பெயர் அல்லது பஸ்ட் லுக் என ஏதாவது படக்குழுவினர் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இது வரை அப்படி எந்த தகவலும் வராததால், மதுரை அஜித் ரசிகர் மன்றத்தினர், இந்த தீபாவளி திருநாளை துக்க நாளாக அனுசரிப்பதாக தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.