வேலூரில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அங்கு தியேட்டரில் சீட் பிடிப்பதில் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால், படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள், பால் அபிஷேகம் என்று களை கட்டி உள்ளன. பட்டாசுகளை வெடித்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், வேலூர் அலங்கார் திரையரங்கில், நேற்றிரவு முதல் ஆடல், பாடல் என அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர்.

பின்னர், சிறப்பு காட்சி தொடங்கியதும், திரையரங்கில் சீட் பிடிக்க ஏற்பட்ட தகராறில் பிரசாந்த், மற்றும் அவரது மாமா ரமேஷுக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதனால், திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.