விஸ்வாசம், பேட்ட! என மாஸ் ஹீரோக்கள் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸான போதும் தமிழகமே அஜித் - ரஜினி ரசிகர்களின் ஆன்லைன் மோதலினால் கொந்தளித்து அடங்கியது. இரு படங்களின் நூறாவது நாள் விழா சமீபத்தில்தான் முடிந்தது. ரிலீஸுக்கு முன்பே ரஜினியுடன் பகையை துவக்கிய தல ரசிகர்கள், நூறாவது நாள் வரையில் வெச்சு செய்தனர் அவரை. இந்நிலையில், இப்போது அவரை விட்டுவிலகி மீண்டும் தங்களின் பழைய பரம எதிரியான விஜய்யை போட்டுப் பொளக்க துவங்கியுள்ளனர்.

 இதுபற்றி பேசும் சினிமாத்துறை விமர்சகர்கள்....”இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அஜித் - விஜய் ரசிகர்கள் மோதிக்கிற மாதிரி வேற எங்கேயும் ஸ்டார் வார் பார்க்க முடியாது. அந்தளவுக்கு மூர்க்கத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் ரெண்டு தரப்பும் மோதிப்பாங்க. 

இந்த நிலையில்  பொங்கலை குறிவெச்சு தயாராக துவங்கிய அஜித்தின் விஸ்வாசம் படம், சொன்ன மாதிரியே ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், லேட்டாய் துவங்கிய ரஜினியின் பேட்ட படமோ தேவையே இல்லாமல் அஜித்துடன் ரேஸில் குதித்தது. இதிலிருந்து அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் ரஜினி மேல் பாய்ந்து, அவரை கிழி கிழின்னு பல மாசங்களாக கிழிச்செடுத்தாங்க. வசூல், மாஸ், ஹிட் ரீதியில் பேட்டயை விட விஸ்வாசம் உயரத்தில் இருந்ததால் அஜித் ரசிகர்களின் கை ஓங்கி இருந்துச்சு பெருசா. 

இந்நிலையில் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பிஸியாகி, ஷுட் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலை போயிட்டிருக்குது. ரஜினியோ தன் மகளின் மறுமணத்தை முடிச்சுட்டு, இதோ முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் பிஸியாகிட்டார். 

இந்த நிலையில் இப்போ அஜித்தின் ரசிகர்கள் மறுபடியும் விஜய் பக்கம் தங்களோட பார்வையை திருப்பியிருக்காங்க. அதுவும் யு டர்ன் அடித்த உடனேயே அவங்க, சவைச்சு துப்புறதுக்கு ‘அவல்’ கிடைச்சுடுச்சு அம்சமா. 

அதாவது விஜய்யின் புதுப்படத்தை இளம் இயக்குநர் அட்லீ இயக்கிட்டு இருக்கிறார். இந்த செம்பரம்பாக்கம் பக்கம் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடக்கும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஏகப்பட்ட துணை நடிகர், நடிகைகள் கலந்துக்கிறாங்க. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதியன்னைக்கு ஸ்பாட்ல தன்னை மிக மோசமான வார்த்தைகளை சொல்லி அட்லியும், அவரது உதவியாளர்களும் திட்டினார்கள் என்றும், துணை நடிகைகளுக்கு எச்சில் சாப்பாட்டைத்தான் போடுகிறார்கள்! என்றும் சரமாரியான புகாரை நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா தேவி எனும் அனுபவம் வாய்ந்த துணை நடிகை. 

இதைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் ஏக பரபரப்பு. ‘தில்லா சொன்னியேம்மா தேவி. ஜாம்பவான் டைரக்டர்ஸ்ட்ட கூட நடிச்சுட்டோம். ஆனால் பழைய ஹிட் படங்களை காப்பியடிச்சு படம் எடுக்கிற இந்த சின்னப் பையன் அட்லி, வயசு வித்தியாசமில்லாமல் ஜூனியர் ஆர்டிஸ்டுங்களை மிக மிக கேவலமா பேசுறான். அடுத்த சூப்பர் ஸ்டார்னு தன்னை போற்ற ஆசைப்படுற விஜய், இதையெல்லாம் கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார். சினிமாவுல மட்டும்தான் அநியாயத்தை தட்டி கேட்பார் விஜய். நிஜத்தில் கண்ணை மூடிக்கிறார்.’ என்று சக ஜூனியர்ஆர்டிஸ்டுகள் வெடித்து சிதறிவிட்டனர். 

இது அஜித் ரசிகர்களின் கவனத்தில் விழ, விஜய்யை வெச்சு செய்ய துவங்கிட்டாங்க. “எங்க தல-ல்லாம் தங்கமான மனுஷன்யா. தயாரிப்பாளர், டைரக்டரில் துவங்கி லைட்மேன், மேக் -அப் மேன், காமெடி நடிகர்களின் உதவியாளர்கள் வரை எல்லாத்தையும் கண்ணியமா மதிக்கிறவரு. சின்ன நடிகர் அப்புக்குட்டியை வெச்சு தன் கையாலே ஸ்பெஷல் போட்டோ ஷோவே நடத்தி, அவரை கவுரவிச்ச மனுஷன். அவரு ஒரு வார்த்தை சொன்னா, தென்னிந்தியாவே ஆடும். ஆனாலும், மனசுல திமிரு இல்லாமல், டவுன் டு எர்த் ஆக வாழுற தலைவன் அவரு. 

ஸ்பாட்ல தன் கையாலேயே அத்தனை பேருக்கும் சமைச்சு போடுற மனுஷன் தல எங்கே, எச்சி சோற்றை ஜூனியர் ஆர்டிஸ்டுங்களுக்கு போடுறதை கண்டுக்காத விஜய் எங்கே! தளபதி ரசிகனுங்களா போயி தும்ப செடியில தூக்கு போடுங்கடா!’ன்னு கொன்னு கொதறிட்டாங்க.

இதற்கு விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பதில் அளிக்க, அதுக்கு இவங்க ரிப்ளை கொடுக்கன்னு பழைய படி தல - தளபதி ரசிகர்கள் மோதலால் பத்தி எரிய துவங்கிடுச்சு இணையதளம்.” என்கிறார்கள். வெளங்கிடும்.