நடிகர் ரிச்சர்டு பல வருடங்களு பின் மிகவும் அழுத்தமான கதையில் நடித்திருக்கும் திரைப்படம் 'திரௌபதி'. ஷீலா, கருணாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரௌபதி திரைப்படம் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.  முதல் நாளே சென்னையில் மட்டும் ரூ 13 லட்சத்தை வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கூடுதல் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகத்தில் காதல் திருமணத்திற்கு எதிராக நடக்கும் ஆணவக்கொலைகளுக்கும், பணத்திற்காக அரங்கேற்றப்படும் நாடக காதல், போலி திருமண பதிவு போன்றவற்றை தோலுரித்துள்ளது இப்படம். கண்டிப்பாக இந்த கலந்து பெண்கள் பார்க்கவேண்டிய படம் என்பதே பலருடைய கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை படத்தின் நாயகன் ரிச்சர்டுடன் சேர்ந்து அவருடைய சகோதரிகள், ஷாலினி அஜித், ஷாமிலி, மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர்.