நடிகர் அஜித் நல்ல நடிகர் என்கிற பெயரை விட, நல்ல மனிதர் என்கிற பெயரை தான் அதிகம் பெற்றுள்ளார். அதே போல் அவருடைய நடிப்பை ரசிப்பதை விட அவர் கூறும் நல்வழிகளை தான் அதிகம் பின் பற்றி வருகின்றனர் அஜித்தின் ரசிகர்கள்.

இதுவரை அஜித்துடன், நடித்த கதாநாயகிகளும் ஒரு முறை கூட அவரை பற்றி தவறாக பேசியது இல்லை.

இப்படி பட்ட அஜித்தின் மனதையே ஒரே படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் கொள்ளை அடித்து சென்றவர் ஷாலினி.

இருவரும் 'அமர்க்களம்' படத்தில் இணைத்து நடித்த போது அஜித் தன் மனதில் உள்ள காதலை ஷாலினியிடன் தெரிவித்துள்ளார். அதற்கு ஷாலினி, வீட்டில் பேசிக்கொள்ளுங்கள் என கூறி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாராம்.

இந்த காதலை கூறியதும் அஜித் ஒரு வித படபடப்புடன் இருக்கும் போது, அடுத்த பத்தாவது நிமிடம் ஷாலினியின் கையை அஜித் கத்தியால் அறுக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதட்டத்துடன் இருந்த அஜித் கொஞ்சம் அழுத்தமாக ஷாலினி கையில் கத்தியை வைக்க, நிஜமாகவே ஷாலினியின் கையில் காயம் ஆகிவிட்டதாம்.

ஆனால் இதனை பெரிதாக ஷாலினி எடுத்து கொள்ளவில்லையாம், ஆனால் அஜித் இதனை கண்டு மிகவும் பதறி விட்டாராம்.  இந்த தகவலை அமர்க்களம் படத்தின் இயக்குனர் சரண் வெளியிட்டுள்ளார்.