தல படங்களில் நடிப்பதை தாண்டி மெக்கேனிக் தொழில், ரேஸிங், ஏரோ மாடலிங், விமானம் ஓட்டுவது என ஆர்வம் அதிகம். சினிமா மட்டுமின்றி பல துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார்.  படம் நடித்துவிட்டு நடுவில் நேரம் கிடைக்கும் போது அவரின் விருப்பத்திற்க்கேற்ற சில விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

சமீபகாலமாகவே அவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. அப்படி தான் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்தார்.

இந்நிலையில், கடந்த  28ஆம் தேதி கோயம்புத்தூரில் 45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். தல இன்று கலந்துகொண்டுள்ளார். 

தல அஜித்தின் வருகையைப் பற்றி கோயம்பத்தூர் குசும்பு பார்ட்டி ஒருத்தர் போட்ட பேஸ்புக் ஸ்டேட்டஸ் இதோ; தல அஜித் வர்றாருன்னு சொல்லி இன்னிக்கு கோயமுத்தூர்ல சில குடும்பங்கள்ள சோறு ஆக்கலையாமா! புள்ளிங்களை கூட இஸ்கூலுக்கு அனுப்பாம, தல வர்ற தடத்துல தவமிருக்க வெச்சு, அவரோட சோத்தாங்கைக்கு ஆப்போஸீட் கையால் ஆசீர்வதிக்கப்படும் பெரும் பாக்கியத்தையும் பெற்றுள்ளார்கள்.

தலயை தரிசிப்பதற் கோஸ்ரம் புது டாப்பு, புது சீலன்னு பொம்பளகளும், இருக்குறதுலேயே பெஸ்ட் டீ ஷர்ட், டிராக் பேண்ட்-ன்னு ஆம்பளையாளுங்களுமா கட்டிட்டு வந்து காத்து கெடந்திருக்காங்க. ஆனா அந்த மனுஷன் இவங்கள சின்ன ஸ்மைலோட  டீல் பண்ணிட்டு, பொழப்ப பார்க்க போயிட்டாரு. என்ன பொழப்பு தெரியுமுங்ளா?....’தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஸன்’ நடத்துற போட்டியில கலந்துக்க. அட ‘ஷூட்டிங்’னா சினிமா ஷுட்டிங் இல்லீங்ணா, துப்பாக்கிய எடுத்து குறிபார்த்து சுடுறதுங்கோவ். அந்தாளு சென்னை ரைஃபிள் கிளப்ல மெம்பரா இருக்கிறார். இப்படி பதிவிட்டுள்ளார்.