தல அஜித் 'விடாமுயற்சி' படத்தில் படப்பிடிப்பில்... பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 30 நாட்கள் அஜர்பைஜான் நாட்டில் எடுத்து முடிக்க பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றனர். அங்கு சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

Hansika Christmas Special: சுஸர்லாந்தில் கணவருடன் ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹன்சிகா! வைரல் போட்டோஸ்!

மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டுவரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், அஜித்துடன் நடிகர் ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசன்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர், பிரபல மலையாள நடிகை பாவ்னாவும் நடித்து வருகிறார்.

Arbaaz Sshoora Wedding: 56 வயதில் சல்மான் கான் சகோதரருக்கு நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் வெட்டிங் கிளிக்

இவர் அஜித்துக்கு ஜோடியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'அசல்' படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில்... அதன் பின்னர் பல வருடங்களுக்கு பின்னர் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளார். ஷூட்டிங்கிற்கு அஜித் சற்று தாமதமாக வந்த நிலையில்... அதற்காக அஜித் பாவ்னாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…