ajith and vijay movie upadate
தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய இருவரும் கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்கள் என்பது அனைவருமே தெரிந்ததே.
இருவரது படங்கள் வெளிவந்தாலும் அன்றய தினத்தை, ரசிகர்கள் விழாவாகவே கொண்டாடி விடுவார்கள்.
இந்த நிலையில் தற்போது அஜித், 'விவேகம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல் விஜய் தற்போது 'தளபதி 61' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் நாயகி காஜல் அகர்வால் என்பதையும் தாண்டி இரு படங்களுக்கும் இடையேயான அபூர்வ ஒற்றுமை ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.
இளையதளபதியின் 'தளபதி 61' படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் தற்போது முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நிறுவனமான கோல்ட்மைன் டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை ரூ.10.8 கோடிக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே நிறுவனம் தான் அஜித்தின் 'விவேகம்' படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையையும் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்த படங்கள் இடையேயான அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது.
