காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று துவங்கிய போராட்டம் தற்போது அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்றுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். 

இப்படி போராடியும் எந்த வித பலனும் இல்லை என்பது தான் பலரது கருத்தாக உள்ளது. காரணம்... ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பல்வேறு இடங்களின் போராடினாலும் அனைவரும் இணைந்து போராடினர். ஆனால் தற்போது தனித்தனியாக பிரிந்து போராடி வருவதால் இந்த போராட்டம் வலுவிழந்து விட்டதாக கூறிவருகின்றனர். 

இவர்கள் பண்ணும் தவறை செய்ய விரும்பாத அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் இந்த போராட்டத்திற்காக இணைந்துள்ளனர். எப்போதும் தனிப்பட்ட கருத்திற்காக மோதிக்கொள்ளும் இவர்கள் காவிரி பிரச்சனைக்காகவும் விவசாயிகளுக்காகவும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

மேலும் தமிழக மக்களுக்காக இப்படி ஒரு போராட்டத்தில் இறங்கியுள்ளது தங்களுக்கு பெருமையாக உள்ளது என கூறி இன்று சிதம்பரதில் உள்ள, அஜித், விஜய், தனுஷ், ஆகியோரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில கூறி குரல் கொடுத்து வருகின்றனர்.