காலா திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இந்தப் படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
காலா திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இந்தப் படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். நடிகர்கள் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நடிகைகள் சிம்ரன், திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படம் வேகமாக வளர்ந்து வருவதால் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இதை உறுதி செய்யும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி திரைப்படம் விழாக்காலத்தில் திரையிடப்பட்டது இல்லை தற்போது இத்திரைப்படம் பொங்கலுக்கு வருமானால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும். 
நவம்பர் 29ஆம் தேதி ரஜினி நடித்துள்ள டூ பாயிண்ட் ஓ திரைப்படமும் வெளியாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். முத்து, பாட்ஷாவிற்கு பிறகு குறைந்த இடைவெளியில் ரஜினிகாந்த் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வருவது இதுவே முதன்முறையாகும் என்பதும் ரசிகர்களை உற்சாக கடலில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் சிவாவுடன் நடிகர் அஜித் குமார் இணையும் நான்காவது திரைப்படமான விஸ்வாசமும் அடுத்தாண்டு பொங்கலன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடித்து வருவதால் அவரது ரசிகர்களும் உற்சாக மிகுதியில் உள்ளனர். இதே போல் சூர்யா நடிப்பில் செல்வராகவன் நடித்து வரும் என்.ஜி.கே படமும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே பேட்ட படமும் பெங்கலுக்கு வெளியாகும் பட்சத்தில், உச்ச நட்சத்திரமான ரஜினியுடன் அஜித்தும், சூர்யாவும் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரஜினி படத்துடன் அஜித்தின் படமும் சரி சூர்யா படமும் சரி வெளியானது இல்லை. இதனால் முதன்முறையக ரஜினியுடன் அஜித் மற்றும் சூர்யா மோதும் சூழல் உருவாகியுள்ளது.
