வழக்கமாக அஜித் படங்கள் என்றாலோ அல்லது அவர் சம்பந்த பட்ட படத்தின் ஆட்கள் பற்றி ஒரு சிறு செய்தி வெளிவந்தால் கூட அது காட்டு தீ போல் பரவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதே போல் அஜித்ததின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவை பல்கேரிய போலீஸிடம் இருந்து அஜித் காப்பாற்றியதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி டிரெண்டில் உள்ளது.

பல்கேரியாவில் தற்போது நடைபெற்று வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்த ஸ்டண்ட் சில்வா திடீரென நாடு திரும்பியுள்ளார். 

பல்கேரிய போலீஸிடம் சில்வா ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டதாகவும், அதற்காக சில்வா கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த அஜித் உடனே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சில்வாவை காப்பாற்றி உடனே இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் வதந்தி பரவி வருகிறது.

இதுகுறித்து சில்வா கூறியபோது, 'ரஜினியின் '2.0' படத்தின் பணி இருந்ததால் அஜித்திடம் அனுமதி பெற்று தான் பல்கேரியாவில் இருந்து கிளம்பி வந்தேன். ஆனால் இங்கு என்னென்னவோ வதந்தி பரவுகிறது. 

இதை கேள்விப்பட்டால் அஜித்தே சிரிப்பார். ஏன் என்னை பற்றி இப்படி ஒரு வதந்தியை கிளப்புகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை' என்று கூறினார்.