அஜித் நடித்த தீனா படத்தில் இயக்குனராக அறிமுகம் கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பல வருடங்களாக கூறி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் சம்மதித்தால் படம் இயக்க தான் தயாராக இருபாகத்தை கூறினார்.இதன் காரணமாக விரைவில் இவர்கள் கூட்டணியில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் தற்போது இவர்கள் இணைவதற்கு முன் மோதிக்கொள்ள உள்ளனர், அஜித் நடித்து வரும் 'தல 57' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து ரம்ஜான் தினத்திற்கு மாற்றப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'மகேஷ்பாபு 23' படமும் அதே நாளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'தல 57' படமும், மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான 'மகேஷ்பாபு 23' படமும் ஒரே நாளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டால் அஜித்துக்கு முருகதாஸ் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.