ajith after not vijay only vijay sethupathi why ?
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுக்கும் நடிகர்களில் அஜித், விஜய் என இருவருமே உள்ளனர். இவர்கள் இருவருக்குமே மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான்.
மேலும் அஜித் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். ஆனால் அஜித் ரசிகர்கள் அவருடைய பெயரில் நற்பணி மன்றமாக அமைந்து பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல அஜித்தும் பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் ஏழை எளிய மக்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் பல உதவிகள் செய்து வருகிறார்.

ஆனால் அவர் செய்யும் உதவிகள் எப்படியோ வெளியே கசிந்து விடுகிறது. இதே போல விஜய் ரசிகர்களும், விஜயும் பரவலாக மக்களுக்கு உதவிகள் வெளியே தெரியாமல் செய்து வந்தாலும்.
விஜய் சேதுபதி செய்து வரும் உதவிகள் அஜித்துக்கு பிறகு பரவலாக பேசப்பட்டு வருகிறது. திரைத்துறையில் இவர் காலடி எடுத்து வைத்து சில ஆண்டுகள் ஆனாலும் இவரது எதார்த்தமான நடிப்பு மிக விரைவாகவே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு இவர், நாடகக்கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அனைவர்க்கும் தங்க நாணயம் வழங்கினார். இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவி அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு மாணவ மாணவிகள் படிப்பிற்காக 50 லட்சம் கொடுத்து உதவினார்.
இதை தொடர்ந்து வெளியே தெரியாமல் திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நடிகர்களும், வயதான துணைநடிகர்கள், மற்றும் மாணவர்கள் படிப்பிற்காகவும் உதவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், அஜித்தை தொடர்ந்து அதிகமாக மக்களுக்கு உதவும் நடிகராக தற்போது விஜய் சேதுபதி பேசப்பட்டு வருகிறார்.
