தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், அடுத்ததாக விரும்பாண்டி 2 படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக சுற்றி வருகிறது.

மேலும் செய்திகள்: பிரபல தமிழ் நடிகருடன் காதலா? வீட்டுக்கு ரகசிய விசிட் அடித்து சிக்கிய நிக்கி கல்ராணி! வெளியான     புகைப்படம்!
 

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார்.

கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா வாழும் வீடு இது தான்..! தனுஷின் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க!
 

இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹியூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கொரோனா பிரச்சனையால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ள சூழ்நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை 2021ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ஹை ஹீல்ஸ், டைட் டிரஸ்... மூச்சு முட்டவைக்கும் நெருக்கம்! மீரா மிதுனை மிஞ்சும் ஸ்ரீதிவ்யா தங்கை டான்ஸ்! வீடியோ
 

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, அஜித் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்... கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற விரும்பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் நடிக்க உள்ளதாக, யாரோ ஒருவர் கிள்ளி போட்ட தீ வைரலாக பற்றி எரிகிறது. அஜித் விரும்பாண்டி பட கமல் கெட்டப்பில் பெரிய மீசை வைத்துள்ளார். 

ரசிகர் யாரோ ஒருவர் உருவாக்கி விட்ட இந்த போஸ்டரில் தயாரிப்பாளர் போனி கபூர் என்றும், இயக்குனர் எச்.வினோத் என்றும் உள்ளது. மேலும் இதுவரை இந்த படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இது முழுக்க முழுக்க வதந்தி. இருப்பினும் அஜித்தின் இந்த கெட்டப்பும் பார்க்க நன்றாக இருப்பதால் மன நிறைவுக்காக அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.