நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே பாவாடை தாவணி போட்ட கிராமத்து குயிலாக நடித்த இவருடைய நடிப்பும், அழகும், ரசிகர்களை ஈர்த்தது. மேலும் வெற்றிப்பட நாயகி என பெயர் எடுத்து விட்டதால் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது.

அந்த வருஷத்திலேயே காக்கி சட்டை, ஈட்டி, ரெமோ, பென்சில், காஷ்மோரா, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் கடந்த 2 வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. எனவே தற்போது  ஈட்டி படத்திற்கு பின் மீண்டும் அதர்வாவுடன் ’ஒத்தைக்கு ஒத்த’ என்ற திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார்.மற்றொரு படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

மாடர்ன் கதாபாத்திரங்களில் ஸ்ரீதிவ்யா நடித்தாலும், கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடித்து வந்த இவருக்கு நேர்மாறாக முதல் படத்திலேயே... கவர்ச்சியில் கிற்ங்கடித்தவர் ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா. ஆனால் அக்காவுக்கு இருந்த லக் இவருக்கு இல்லை. எனவே தொடர்ந்து படங்கள் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா, ஆண் நண்பருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது கொஞ்சம் பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது தான் ஸ்ரீரம்யா, இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஹை ஹீல்ஸ் அனைத்து, டைட் பேண்ட் மற்றும் டி- ஷர்ட்டில் ஸ்ரீரம்யா உள்ளார். இவரின் மூச்சு முட்டவைக்கும் வீடியோ இதோ..."