ajith acting vada chennai person in visuvasam movie

நடிகர் அஜித் விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததுதான். அஜித்தின் 'வி' செண்டிமென்டின் படி இந்தப் படத்திற்கு 'விசுவாசம்' என பெயரிடப்பட்டுள்ளது. 

தலயின் '58 வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தை பற்றி அவ்வபோது ஒரு சில தகவல்களை இந்த படத்தை தயாரிக்கும் சத்திய ஜோதி பட நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி சமீபத்தில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும், இது வரை சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வந்த அஜித் இந்தப் படத்தில் யூத்தாக நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, விசுவாசம் படம் வடசென்னை பகுதியில் எடுக்கப்பட உள்ளதாகவும். தல வடசென்னை பாஷை பேசி கலக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்க உள்ளது விசுவாசம் படத்தின் படபிடிப்பு என்றும் ... 2018 தீபாவளி தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது