தல அஜித் தற்போது பாலிவுட் திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் நடித்துள்ள வேடத்தில் நடித்துள்ள அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்தியா பாலன் நடித்துள்ளார்.

'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியுள்ளார்.  இப்படம் ஆகஸ்ட் மாதம், 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, அஜித் தன்னுடைய 60 ஆவது படத்தையும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்து வரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில்,  தல 60 படம் குறித்து தேசிய ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார் போனி கபூர். " நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் பற்றி நன்கு தெரிந்துக் கொண்டேன். குறிப்பாக அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில்  ஆர்வம் உள்ளது பற்றி தெரிந்தது.

த்ரில்லர் ஜர்னரில் உருவாக உள்ள, தல 60 படத்தில் அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

F2, F3, ஆசிய ரேஸிங் சாம்பியன் போட்டிகளில் கலந்துக் கொண்டு பட்டங்களை வென்ற அஜித், தனது படத்தில் ஓரிரு பைக் சேசிங் காட்சிகளில் நடித்தாலும்,  அதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என ரகசியத்தை கசியவிட்டுள்ளார்.  எனவே, தல 60 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.