Ajith - Siva Co-producer planning to complete the film
அஜித், சிவா இணையும் அடுத்தப் படத்தை விரைந்து முடித்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது படக்குழு.
வீரம், வேதாளம், விவேகம் என நடிகர் அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் கொடுத்தவர் இயக்குனர் சிவா.
இவர் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஒரு படம் நடிக்கப்போவதாகவும், அதனை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விவேகம் படம் மாதிரி அதிக நாட்கள் எடுக்காமல், குறுகிய கால தயாரிப்பாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்தப் படத்தின் படப்படிப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திரைக் கதையை இறுதி செய்யும் பணிகல் நடைப்பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.
இந்தப் படத்தை விரைந்து முடித்து வரும் தீபாவளிக்கு வெளியிட்டாக வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு உள்ளது என்பது கொசுறு தகவல்.
