இந்தியாவின் முன்னணி நாயகர்கள் பலரை ஒன்று திரட்டி அடுத்து இயக்குநர் மணிரத்னம் இயக்குவதாக இருந்த ‘பொன்னியின் செல்வன்’ கனவை சூப்பர் ஸ்டாரின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் காலிசெய்திருக்கிறார்.

சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுத்தாளர்கள் கல்கியால் 5 பாகங்களாக எழுதப்ப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப்படமாக்கப்போவதாக எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை ஆசைப்படாத சினிமா பிரபலங்களே இல்லை. இந்த நாவலைப் படமாக்கும் அறிவிப்பு வராத ஆண்டுகளே தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.

இதன் தொடர்ச்சியாக, மிகச் சமீப காலமாக இயக்குநர் மணிரத்னம் அரவிந்தசாமி, விக்ரம், சிம்பு, விஜய் செதுபதி ஆகியோருடன் சில இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களையும் இணைத்துக்கொண்டு மிக விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்று இரவு ரஜினியின் மகள் சவுந்தர்யா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரியலாக தயாரிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரபூர்வமாக அற்வித்து ஒரு டீஸரையும் வெளியிட்டார். இந்த வெப் சீரியலை எஸ். சூர்யபிரதாப் என்பவர் இயக்குகிறார்.

இந்த அறிவிப்பைக் கேட்டுக்கொதித்துப்போயிருக்கும் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ புராஜக்டைக் கைவிடுவாரா அல்லது தானும் வீம்புக்கு படம் இயக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.