வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், காக்கா முட்டை படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து, விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

ஹீரோயினாக வளர்ந்து வரும் நேரத்தில் மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேரவே பெரும்பாலான நடிகைகள் விரும்புவர். ஆனால்,சிவகார்த்தியேன் ஹீரோவாக நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகி, அவருக்கு நல்ல பெயரை  பெற்றுத்தந்தது. இப்படி ஹீரோயின் கேரக்டரோ, தங்கை கேரக்டரோ எதுவாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் துணிச்சலுடன் ஓகே சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதியுடன் க/பெ ரணசிங்கம், கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் ஒரு புதிய படம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு புதிதாக ஃபோட்டே ஷுட் நடத்தியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த புகைப்படங்களை தற்போது இணையதளங்களில் பரவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, அவரின் அழகில் மயங்கிய ரசிகர்கள், அவரது பெயரிலேயே ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கினர்.

டல் மேக்கப்பில் டஸ்கி லுக்கில் அசரடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகிறது.vv