சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதல் முறையாக தன்னுடைய காதல் அனுபவங்கள் குறித்து காதலர் தின ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்துள்ளர்.

காதலர் தினம்:

காதல் என்பது உலகில் உள்ள அனைத்து மனிதருக்கும் பொதுவான ஒன்று. காதலிக்காத மனிதன் உலகில் இல்லை எனலாம். பல பிரபலங்கள் தங்களுக்கு காதல் வந்ததே இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் ஒரு நிலையில் யாரோ ஒருவர் மீது கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு க்ரஷ் இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐஸ்வர்யா ராஜேஷ் காதல்:

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதலர் தின ஸ்பெஷலாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது இவருடைய இரண்டு காதல் தோல்விகள் குறித்து பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா பேசியது...

நான் 11, 12ம் வகுப்பு படிக்கும் போது ஒரு நபரை காதலித்தேன். ஆனால் அவன் என்னை ஏமாற்றிவிட்டான், தற்போது அவன் கண்டிப்பாக வருத்தப்படுவான். பிறகு கல்லூரிக் காலத்தில் 6 வருடமாக ஒருவரை காதலித்தேன்.

நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதால் சாதாரணமாக என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது பலருக்கும் தெரியும். இதனால் நாங்கள் எங்கள் காதலை முறித்துக் கொண்டோம். என்று தன்னுடைய காதல் தோல்விகள் குறித்து பேசியள்ளார்.

ஆனால் என்னுடை மூன்றாவது காதல் எப்போதும் இருக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார.