aishwarya roy 27 age son issue

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சானுக்கும் திருமணம் ஆகி ஆராத்யா என்கிற ஒரு மகள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் ஆந்ராவை சேர்ந்த, சங்கீத் குமார் என்கிற இளைஞர் 'நான் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் மகன்' என கூறிக்கொண்டு சொந்தம் கொண்டாடி மும்பைக்கு வந்துள்ளார். இந்த தகவல் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இது குறித்து சங்கீத் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தன்னுடைய தந்தை பெயர் ஆதிவேலு ரெட்டி, நான் 1988ல் லண்டனில் IVF முறையில் என்னுடைய தாய் ஐஸ்வர்யா ராய் கிருஷ்ணனுக்கு பிறந்தேன். இரண்டு வருடம் நான் ஐஸ்வர்யாயின் பெற்றோரிடன் தான் வளர்த்தேன். அதன் பிறகு தன்னுடைய தந்தை ஆதிவேலு ரெட்டி தன்னை விசாகப்பட்டினத்துக்கு அழைத்து சென்று விட்டதாகவும் சங்கீத் குமார் தெரிவித்துள்ளார். 

நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்கிற அனைத்து ஆதரங்களையும் உறவினர்கள் அழித்து விட்டதால், தற்போது நான் அவருடைய மகன் என நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் தவிப்பதாகவும் இவர் கூறியுள்ளார். 

அதே போல் இனி தன்னால் விசாகப்பட்டினத்தில் இருக்க முடியாது என்பதால் தன்னுடைய தாயுடன் சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் மும்பைக்கு வந்துள்ளதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.