பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் நடிகை  ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'பாயும் புலி', 'அச்சாரம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் கோவத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், பைனல் வரை வந்து ரன்னராக வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்த நெருங்கிய தோழி நடிகை யாஷிகா தான். கடைசி வரை ஐஸ்வர்யா வெளியே போகாமல் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்ததற்கு முக்கிய காரணம் 'யாஷிகா' என்று கூறலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறியதும், சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என  தகவல்கள் வந்தது. ஆனால் அது இன்னமும் உறுதி ஆகாமல் தான் உள்ளது.

இந்நிலையில் தற்போது மஹத்-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் மஹத் வடசென்னை வாலிபராகவும், ஐஸ்வர்யா பணக்கார வீட்டு பெண் போலவும் நடிக்கிறார்களாம்.

பிரபு ராம் என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இது ரொமான்டிக் காமெடி படமாக எடுக்கப்பட உள்ளதாகவு இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, மஹத்தை தான் காதலிப்பதாக ஒற்றுக்கொண்ட யாஷிகா, மஹாதின் காதலி அவரை விட்டு பிரிந்ததும்... மஹத்துடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். மேலும் தற்போது ஐஸ்வர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதால் யாஷிகா கண் முன்பே ஐஸ்வர்யா அவரின் காதலர் மஹத்துடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.