நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நம்ம வீட்டு பெண் போன்ற ஐஸ்வர்யா ராஜேஷின் ஏதார்த்தமான முகம் தமிழக ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயம். நம்ம வீட்டு பிள்ளை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததற்கு பிறகு, க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். விருமாண்டி இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஒன்றாக நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமின்றி தமிழக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்ற ஜோடியாகவும் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி மாறியது. தற்போது இந்த சூப்பர் ஜோடி நான்காவது முறையாக ஒன்றிணைந்துள்ளது. க/பெ ரணசிங்கம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் சேதுபதியுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். நிஜமான கிராமத்து காதல் ஜோடிகள் போல் உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் செம லைக்குகளை குவித்து வருகிறது.

இருந்தாலும் விஜய் சேதுபதி கூட ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்திருப்பது பிரச்னையை கிளப்பியிருக்கு. இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன தேவசேனா, உரசல் ஓவர்-ஆ இருக்கு, புரிது மக்கள் செல்வராச்சே சும்மாவா என்று கமெண்ட் செய்துள்ளனர். சிலர் விஜய் சேதுபதியின் மண்டி ஆப் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.