தமிழில் கடந்த ஆண்டு இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வெளியான திரைப்படம் 'கனா'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது, இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளதால்,  படத்தின் பிரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கௌசல்யா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயனும் வில்சன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு "கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி"  என டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை சீனிவாசராவ் என்கிற இயக்குனர் இயக்கி உள்ளார்.  இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ரியல் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையான மித்தாலிராஜ் கலந்துகொண்டு இந்த படத்தை பிரமோட் செய்ய உள்ளார். நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இது குறித்த ஒரு போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.