தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெற்றி மாறன் என்றால்... அவருடைய பாணியிலேயே தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனை பார்த்து பச்சை பச்சையாய் பேசிய சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்துகொண்டுள்ளார் ஐஸ்வர்யா.

அதாவது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வடசென்னை' படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக ஆடிஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் சென்றபோது, இயக்குனர் வெற்றி மாறன் உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை பேசுங்கள் அது தான் ஆடிஷன் என கூறினாராம்.

இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ், வேறு வழி இல்லாமல், தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை அவிழ்த்து  விட்டுள்ளார் இதை கண்டு மிரண்டு போன வெற்றிமாறன், நீ தான் இந்த படத்தின் ஹீரோயின் என கூறிவிட்டதாக, நடிகை ராதிகா நடத்தி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தனக்கு கெட்ட வார்த்தைகளே பேச தெரியாது என, சீன் போடாமல்... பச்சை பச்சையாய் பேசி தான் இந்த படத்தின் வாய்ப்பை, ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து வீடியோ..