சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சிவகார்த்திகேயனின் தற்போது நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல் படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில், நடிக்க உள்ள படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 16வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவதாக நேற்று தகவல் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. 

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என்றாலும் அவர் தயாரித்த முதல் படமான 'கனா' படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.