ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டில் தற்போது பட மழை பிச்சிகிட்டு கொட்டுகிறது என்று தான் கூறவேண்டும். நயன்தாரா பரபரப்புக்கு மத்தியில் வளர்ந்து நிற்கும் நடிகை என்றால், அம்மணி சைலண்டாக வளர்ந்து வருகிறார்.

தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் தெலுங்கில் இவர் நடித்த 'கனா' படத்தின் ரீமேக் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவரின் கை வசம் தற்போது... பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, போன்ற படங்கள் உள்ள. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயாகியாக நடிக்காமல், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த திரைப்படம் இவருடைய மார்க்கெட்டை குறைய செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், அந்த பேச்சுகளை தவிடுபொடியாக்கி, கதாநாயகி என்கிற அந்தஸ்தை சற்றும் தளர்ந்து கொள்ளாமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது வெள்ளை நிற டாப், மற்றும் கருப்பு நிற லாங் ஸ்கர்ட் அணிந்தபடி எடுத்து கொண்டுள்ள நான்கு புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த புகைப்படங்கள் இதோ...