இலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

நடிகையும், இயக்குனருமான இலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் ஒரு படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என பெயரிட்டுள்னர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.

‘ஹவுஸ் ஓனர்’ படம் குறித்து இலட்சுமி ராமகிருஷ்ணன் கூறியது:

‘‘இந்தப் படம் ஒரு தரமான, குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் படமாக இருக்கும். சமீபத்தில் நான் மும்பைக்கு சென்றிருந்தபோது ஒரு இந்தி படம் பார்க்க நேரிட்டது. அப்படம் என்னை மிகவும் வெகுவாக பாதித்தது.

அதனை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அப்படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில பல காரணங்களால் அது முடியாமல் போனது. ஆனால், அப்படம் அளித்த உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதனை நகைச்சுவையோடு சொல்லவுள்ளேன்’’ என்றார் இலட்சுமி ராமகிருஷ்ணன்.