‘பூமிகா’ நேரடியாக விஜய் டிவியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு இப்படம் ஒளிப்பரப்பப்படுகிறது.

தமிழ் திரையுலகில் சமீப காலமாக க்ரைம் திரில்லர் மற்றும் ஹாரர் கலந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் ஹீரோயின்களை பிரதானமாக கொண்ட கதைகளுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் திகில் நிறைந்த பூமிகா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார்.

Click and drag to move


ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பிரித்வி சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

Click and drag to move

ஏற்கனவே இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் ‘பூமிகா’ நேரடியாக விஜய் டிவியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு இப்படம் ஒளிப்பரப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியாகியுள்ளது. மர்மம் மற்றும் இருள் நிறைந்த காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதோ அந்த வீடியோ.... 

YouTube video player