நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு எதிர்பாராத செயலை செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

40 வயதை கடந்தும் தற்போதுவரை இளம் நடிகைகளுக்கு கடும் போட்டியாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய்.  இவருடைய கால்ஷீட் கிடைக்குமா என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் ஐஸ்வர்யா ராய், தான் நடிக்கும் கதைகளை மிகவும் தெளிவாக தேர்வு செய்வதோடு மனதிற்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், தன் கணவர் அபிஷேக் பச்சனின் 43 ஆவது பிறந்த சிறப்பிக்கு விதமாக தன்னுடைய வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.

அதாவது அபிஷேக் பச்சனின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் வலை தளத்தில் பதிவேற்றி,  "ஹாப்பி பர்த்டே மை பேபி" என வாழ்த்தி உள்ளார்.  இந்த புகைப்படம் பதிவிட்ட சில நிமிடங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வைரலாகி வருகிறது.

மனைவியிடமிருந்து இதனை சற்றும் எதிர்பார்க்காத அபிஷேக்பச்சன் இன்ப அதிர்ச்சியில் உறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிவராத அபிஷேக் பச்சனின் இந்த குழந்தைப்பருவ புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.