சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சுதந்திரம் பிரபலங்களுக்கு பொது இடங்களில் கிடைப்பதில்லை. சில சமயங்களில் அவர்கள் எது செய்தாலும் சர்ச்சையாக மாறிவிடுகிறது. இதனால் பல பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அதிகம் பேசுவதை கூட தவிர்த்து விடுகிறார்கள்.

அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய குடும்பம் சாதாரணமாக செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற தேர்தலில், ஐஸ்வர்யா ராய், அவருடைய கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப்பச்சன், மற்றும் மாமியார் ஜெயாபச்சனுடன் சென்று ஓட்டு போட்டார். அங்கு அனைவருக்கும் நாடு விரலில் தான் ஓட்டு போட்டதற்கான அடையாள மை வைத்தனர் வாக்கு சாவடியில் இருந்த அதிகாரிகள். 

ஓட்டு போட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த போது... அனைவரும் நடு விரலை மட்டும் காட்டியது தான் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் அஜித் ஓட்டுப்போட போது, தேர்தல் மையத்தில் இருந்த அதிகாரி, பதற்றத்தில் தவறுதலாக நடு விரலில் மை வைத்தார். அப்போது அஜித் செய்தியாளர்களிடம் ஐந்து விரல்களையும் காட்டினார். இதனால் அவருக்கு தெரிந்த நாகரீகம் கூட, ஐஸ்வர்யா ராய் குடும்பத்திற்கு தெரியவில்லையே என விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.